முதல் முறையாக ஆன்லைனில் ஓட்டுப்பதிவு!
புதுச்சேரி நெல்லித் தோப்பு சட்டசபை தொகுதியில் முதன் முறையாக ஆன்லைனில் தபால் ஓட்டு பதிவு செய்யும் முறை அமலாகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தபால் மூலம் ஓட்டு அளிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. அந்த முறை சற்று கால விரயம் ஏற்படுத்துவதாக உள்ளது. இதையடுத்து, அதற்கு மாற்றாக ஆன்லைன் மூலம் மின்னணு தபால் ஓட்டுப்பதிவு முறை அமல்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்காக, பல்வேறு தொழில் நுட்ப சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனை திருப்திகரமாக இருப்பதாக தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
இந்நிலையில், முதல் முறையாக நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட உள்ளது.