ஆசிரியர் பதவி உயர்வில் கல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது 'கிராஸ் மேஜர்', 'சேம் மேஜர்' பிரச்சனை.

ஆசிரியர் பதவி உயர்வில் கல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது 'கிராஸ் மேஜர்', 'சேம் மேஜர்' பிரச்சனை.
        முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் வரலாறு, புவியியல் பாடப்பிரிவுகளில் 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னை
யால் சிலர் பாதிக்கப்பட்டனர். இதனை தீர்க்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

          முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் டி.ஆர்.பி., தேர்வு மூலமாகவும், மீதம் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வு மூலம் நிரப்புவதில் வரலாறு, புவியியல் பாடங்களுக்கு முதுநிலை ஆசிரியர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை இருந்தது. இதையடுத்து 2000 அக்., 18 ல் இளநிலையில் ஏதாவதொரு பட்டத்தை முடித்து, முதுநிலையில் வரலாறு, புவியியல், பாடப்பிரிவுகளை படித்தோர் (கிராஸ் மேஜர்) 3 பங்கும், இளநிலை, முதுநிலை இரண்டிலும் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்தோர் (சேம் மேஜர்) ஒரு பங்கும் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது.தற்போது அந்த பாடங்களில் 'சேம் மேஜர்' முடித்தோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும் பழைய அரசாணைப்படியே

முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் நடக்கிறது. இதனால் 'சேம் மேஜர்' முடித்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதனை கண்டித்து பாதிக்கப்பட்டோர் போராடி வந்தனர். இதையடுத்து முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் 1:3 என்ற விகிச்சார முறையை மாற்றியமைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விபரங்களை நவ., 30 க்குள் அனுப்பி வைக்க பள்ளி கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர்களை கேட்டு கொண்டுள்ளது.

தமிழ்நாடு வரலாறு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் பழனியப்பன் கூறியதாவது: 'கிராஸ் மேஜர்,' 'சேம் மேஜர்' பிரச்னையால் பலர் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெற்றனர். 15 ஆண்டுகள் போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது, என்றார்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank