கல்லூரி காலங்கள்' நிகழ்ச்சியில் போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள்


         பொதிகை தொலைக்காட்சியில், கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும், 'கல்லுாரிக் காலங்கள்' என்ற நிகழ்ச்சியில், போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள் தெ
ரிவிக்கப்பட உள்ளன.

        பொதிகை தொலைக்காட்சியில், திங்கள் முதல், வெள்ளி வரை, இரவு, 10:30 - 11:00 மணிக்கு, கல்லுாரி காலங்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

        இதை, இறையன்பு வழங்கி வருகிறார். விடுதி வாழ்க்கை, பட்டப் படிப்புகளில் எதிர்கால வாய்ப்புகள், வாழ்க்கைத் திறன்கள், நேர மேலாண்மை, சமூக அக்கறை, நினைவாற்றல், நுண்ணறிவு, தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தல் குறித்து, இந்நிகழ்ச்சியில் விளக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி, சமூக வலைதளங்களிலும் பதிவேற்றப்படுகிறது.

          டிச., 2ல் இருந்து, இந்நிகழ்ச்சியில், குடிமைப் பணிகள், இந்தியப் பொறியியல் பணி, இந்தியப் பொருளாதாரப் பணி, மத்திய தேர்வாணையப் போட்டித் தேர்வுகள், பணியாளர் தேர்வு ஆணையப் பணிகள், தமிழ்நாடு தேர்வாணையப் பணிகள் குறித்த விபரங்கள், அளிக்கப்பட உள்ளன.போட்டித் தேர்வுகளைப் பற்றிய தகவல்கள், பாடத் திட்டம், படிக்க வேண்டிய அணுகுமுறை, தொடர்பு நுால்கள், குறிப்புகள் தயாரிக்கும் முறை ஆகியவை, இந்நிகழ்ச்சியில் இடம் பெறும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022