சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு தேர்வு முடிவு வெளியீடு.

PUBLICATION OF RESULTS-MADRAS HIGH COURT SERVICE | சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு தேர்வு முடிவு வெளியீடு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு. சென்னை உயர்நீதிமன்றப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 27.08.2016 மு.ப. மற்றும் 28.08.2016மு.ப. & பி.ப ஆகிய நாட்களில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் கீழ்க்கண்டவாறு விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர் :-
     
வ.
எண்.
பதவியின் பெயர்
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை
1
மாண்புமிகு நீதிபதிக்கான நேர்முக உதவியாளர்
92
310
2
பதிவாளருக்கான நேர்முக உதவியாளர்
7
3
துணைப்பதிவாளருக்கான நேர்முக எழுத்தர்
2
4
கணினி இயக்குபவர்
81
3532
5
தட்டச்சர்
102
41813
6
நீதிமன்ற அலுவலர் (Reader)/
தேர்வாளர்
99
7
காசாளர்
2
8
ஒளிப்படி இயக்குபவர்
6

இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வ.எண்.1, 2 மற்றும் 3 ஆகிய நேர்காணலை உள்ளடக்கிய பதவிகளுக்கு நேர்காணலுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 14.11.2016 & 15.11.2016 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
மேலும், வ.எண்.4, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்களின் தரவரிசை நிலை (Mark & Rank Position)தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Community wise Rank), சிறப்புப் பிரிவு(Special Category) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலை ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 14.11.2016 முதல் 17.11.2016 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பக்கல்வி தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். மேற்படி தேர்வில் கலந்துகொண்டு, இப்பதவிக்கான அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. வெ. ஷோபனா, இ.ஆ.ப.,தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)