பொறியியல் கல்லூரி மாணவர் ரேங்க் பட்டியல் வெளியீடு மாநில அளவில் சாய்ராம் கல்லூரி முதலிடம்
பொறியியல் கல்லூரி மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது. இதில், அதிக எண்ணிக்கையிலான ரேங்குகள் பெற்று (236 ரேங்குகள்) செ
ன்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இவை அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளின் ரேங்க் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ரேங்க் பட்டியலை பாடப் பிரிவுகள் வாரியாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) பார்க்கலாம். இந்த பட்டியலில், வெவ்வேறு படிப்புகள் மற்றும் பாடப்பிரிவுகள் வாரியாக பல்கலைக்கழக அளவில் முதலிடம், 2-ம் இடம் 3-ம் இடம் என்ற வரிசையில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களின் பெயர், அவர்கள் படித்த கல்லூரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், அதிக எண்ணிக்கையிலான ரேங்குகள் பெற்ற கல்லூரி என்ற முறையில் சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி 236 ரேங்குகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து சாய்ராம் கல்வி குழுமங்களின் முதன்மைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து கூறியதாவது: பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல், மெக்கானிக்கல், புரடக்சன் இன்ஜினியரிங் மற்றும் எம்இ எம்பெடெட் சிஸ்டம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் எங்கள் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். ஒட்டுமொத்த ரேங்க் எண்ணிக்கையில் பிஇ படிப்பில் 172 ரேங்குகள், எம்இ படிப்பில் 64 ரேங்குகள் என மொத்தம் 236 ரேங்குகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம். தொடர்ந்து 3 ஆண்டுகள்.. 2014-ம் ஆண்டு 154 ரேங்குகள் பெற்றும், 2015-ல் 170 ரேங்குகள் பெற்றும் மாநில அளவில் முதலிடத் தைப் பிடித்தோம். தொடர்ந்து 3 ஆண்டு களாக மாநில அளவில் முதலிடம் பெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்காக உழைத்த பேரா சிரியர்களையும், சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். சாய்ராம் கல்லூரிக்கு அடுத்தபடியாக ஒட்டுமொத்த ரேங்க் எண்ணிக்கையில் 137 ரேங்குகள் பெற்று சென்னை ஆர்எம்கே பொறியியல் கல்லூரி 2-ம் இடத்தையும், 136 ரேங்குகள் எடுத்து எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.