தினம் ஒரு கைப்பிடி 'வால்நட்' போதும் - இளைஞர்களின் மனநிலை மேம்படும்
தினம் ஒரு கைப்பிடி 'வால்நட்' போதும் - இளைஞர்களின் மனநிலை மேம்படும்: புதிய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்
தினமும் ஒரு கைப்பிடி வால்நட் (அக்ரூட்) சாப்பிட்டால், இளை ஞர்களின் மனது மகிழ்ச்சியாக இருக்கும். அவர்களுடைய
மனநிலை மேம்படும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி யாளர் பீட்டர் பிரிபிஸ், வால்நட் பற்றி ஆய்வு செய்துள்ளார். இது குறித்து பீட்டர் கூறியதாவது:
இப்போது நாங்கள் மேற் கொண்ட ஆய்வு வேறு வகை யானது. வால்நட்டால் மனித அறிவாற்றல், மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தோம். அதற்காக 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட 64 மாணவ, மாணவிகளை தேர்வு செய்தோம்.
அதன்படி தினமும் ஒரு கைப்பிடி அளவுள்ள வால்நட்டை 8 வாரங்களுக்கு அவர்களை சாப்பிட செய்து ஆய்வு செய்தோம். அதன்பிறகு அவர்களுடைய மனநிலை மேம்படுவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக வால்நட் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிக்கக் கூடிய அளவுக்கு மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய மனநிலையும் (மூட்) மகிழ்ச்சியாக மாறி உள்ளது. உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆய்வில் பங்கெடுத்த வர்களை தினமும் 3 துண்டு என 16 வாரங்களுக்கு (சிலைஸ்) வாழைப்பழ பிரட் சாப்பிட சொன்னோம். இதில் 8 வாரங் கள் வாழைப்பழ பிரட்டுடன் வால் நட்டும், 8 வாரங்கள் வால்நட் இல்லாமல் வாழைப்பழ பிரட்டும் சாப்பிட்டனர். இதுபோல் சில மாற்றங்களை செய்து ஒவ்வொரு 8 வார முடிவிலும் மாணவர்களின் மனநிலையை அளவிட்டோம்.
பின்னர் அவர்கள் ஒவ் வொருவரிடமும் சில கேள்விகள் கேட்டு ஆய்வு செய்தோம். பதற்றம், மன அழுத்தம், கோபம், சோர்வு, சுறுசுறுப்பு, குழப்பம் ஆகிய மனநிலைகள் குறித்து ஆய்வு செய் தோம். கேள்விகளுக்கு அளிக் கப்பட்ட பதிலின் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.
இந்த ஆய்வில் வால்நட் சாப்பிட்ட இளைஞர்களின் மன நிலை, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது தெரிய வந்தது. அதேவேளையில் இளம் பெண்களின் மனநிலையில் எந்த முன்னேற்றத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. அது ஏன் என் றும் எங்களுக்கு தெரிய வில்லை.
இவ்வாறு பீட்டர் கூறியுள்ளார்.
வால்நட்டில் ஆல்பா லினோ லெனிக் ஆசிட், விட்டமின் இ, மெலடோனின் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் என தெரியவந்துள்ளது.