குழந்தைகள் தொடர்பான புள்ளி விபரங்கள் வெளியீடு!


         2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் 5 வயது முதல் 19 வயது வரை உள்ள மாணவர்கள் 1,50,883 பேர் கல்வி கற்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.


         பள்ளிக்குச் சென்று பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர்கள் 32,879 பேர் என்றும், 55,994 பேர் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதே இல்லை என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தேசிய அளவில் 65,72,999 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளதாகவும், இவர்களில் 40,21,301 பேர் கல்வி கற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளின் எண்ணிக்கை 7,97,961 பேர் என்றும், முக்கியமாக நாடு முழுவதும் பள்ளிக்கே செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 17,53,737 ஆக உள்ளது என்றும் அந்தப் புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)