ரயில் டிக்கெட் ரத்துக்கு ஆதார், பான் கார்டு கட்டாயம்


        முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் வங்கி கணக்கு எண் கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ரத்து செய்யப்படும் டி
க்கெட்டின் தொகை பயணியின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

கறுப்பை வெள்ளையாக்க திட்டம்


பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை ரயில் டிக்கெட் மூலம் வெள்ளையாக மாற்ற பலரும் முயற்சித்து வருகின்றனர். 

ரயில் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை பயன்படுத்தி, முதல் வகுப்பு ஏ.சி., போன்ற அதிக கட்டணங்கள் கொண்ட டிக்கெட்களை பழைய நோட்டுகளை கொண்டு பலரும் அதிகளவு முன்பதிவு செய்வது தெரியவந்துள்ளது.

அவர்கள் சில நாட்களுக்கு பின்னர், முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்து புதிய கரன்சிகளை பெறலாம் என திட்டமிட்டனர். இதன் மூலம், வருமான வரித் துறையின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்கலாம் என எண்ணினர்.

சமூக வலைதளங்களின் வழியாக பரவிய இந்த யோசனையை பார்த்த பலரும் முன்பதிவு செய்வதற்கு ரயில்நிலையங்களில் குவிந்தனர்.
ஆதார், பான் கார்டு கட்டாயம்


இதை கண்டறிந்த ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்களை ரத்து செய்யும் போது ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும். 

ரத்தாகும் டிக்கெட்டின் தொகை ரொக்கமாக வழங்குவதற்கு பதிலாக அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம், கறுப்பை வெள்ளையாக்க நினைத்தவர்களுக்கு கிடுக்குபிடி போடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank