டெபாசிட் செய்யும் பணத்திற்கான வரியும்.. அபராதமும்... முழுவிவரம்

பழைய500 ரூபாய், 1000 ரூபாய்நோட்டுகளை ஒழித்துக்கட்டும்மத்திய அரசின் திட்டப்படி, மக்கள்தங்களிடம் உள்ள பணத்தைவங்கி களில்முழுமையாக டெபாசிட்செய்யலாம். ஆனால், இரண்டரைலட்சத்திற்குமேல் டெபாசிட் செய்யும்போது, அதற்கானவருவாய்ஆதாரங்களையும்

தயாராக வைத்திருக்க வேண்டும். வருமான வரித்துறை ஆய்வின்போது, டெபாசிட்செய்த தொகைக்குபொருத்தமான வருவாய்ஆதாரங்களைகாண்பிக்கதவறினால், வருமானவரியுடன் 200 சதவிகிதஅபராதத்தையும் செலுத்தநேரிடும்.

அதன்படிவங்கிகளில் செலுத்தும்பணத்திற்கான அபராதம் என்னஎன்பதைவிரிவாகப் பார்க்கலாம்.

இரண்டரைலட்ச ரூபாய் வரைடெபாசிட்செய்தால் அதற்கு வரியோ, அபராதமோகிடையாது.

5 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 25 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 50 ஆயிரம் ரூபாய்அபராதமும்சேர்த்து 75 ஆயிரம்ரூபாயை, அதாவதுமொத்ததொகையில் 15 சதகிவிதத்தைவரியாக செலுத்த நேரிடும்.

10 லட்சரூபாய் டெபாசிட் செய்தால்ஒரு லட்சத்து 25 ஆயிரம்ரூபாய்வருமான வரியுடன், 2 லட்சத்து50 ஆயிரம் ரூபாய் அபராதமும் சேர்த்து3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 37.5 சதகிவிதத்தை வரியாக செலுத்தநேரிடும்.

15 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்வருமானவரியுடன், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 55 சதகிவிதத்தை வரியாக செலுத்தநேரிடும்.

20 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்வருமானவரியுடன், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 64 சதகிவிதத்தை வரியாக செலுத்தநேரிடும்.

30 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்வருமானவரியுடன், 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்சேர்த்து21 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்த தொகையில் 73 சதகிவிதத்தை வரியாக செலுத்தநேரிடும்.

50 லட்சரூபாய் டெபாசிட் செய்தால் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்வருமானவரியுடன், 27 லட்ச ரூபாய்அபராதமும்சேர்த்து 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்ததொகையில் 81 சதகிவிதத்தைவரியாக செலுத்த நேரிடும்.

ஒரு கோடி ரூபாய்டெபாசிட்செய்தால் 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானவரியுடன், 56 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்அபராதமும்சேர்த்து 84 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, அதாவதுமொத்ததொகையில் 85 சதகிவிதத்தைவரியாக செலுத்த நேரிடும.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank