புதிய பாடத்திட்டங்கள் எப்போது அமலாகும்?


           “பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன; 2018 - 19 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்,” என, தொடக்க கல்வி துறை
அமைச்சர் தன்வீர் செய்ட் தெரிவித்தார்.

          மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர்கள் அருண் சஹாபுரா, சோமண்ணா பேவினமடா, காங்கிரசின் தர்மசேனா ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் தன்வீர் செய்ட் கூறியதாவது:மாநிலத்தில், 1ம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை மாற்றி அமைப்பதற்கு, வெவ்வேறு மொழிகளில் வல்லுனர்கள் அடங்கிய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன.இது பற்றி, பர்கூரு ராமசந்திரா தலைமையிலான கமிட்டியுடன் விவாதிக்கப்படுகிறது. இக்கமிட்டி, அடுத்த மாதம், 8 அல்லது, 9ம் தேதியில் தாக்கல் செய்யும்.அந்த அறிக்கையை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கமிட்டி அமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டாகிறது. இக்கமிட்டி, இதுவரை எந்த இடைக்கால அறிக்கையும் அளிக்கவில்லை. அறிக்கை தயாரிக்கும் பணி, இறுதி கட்டத்தில் உள்ளதாக, தெரிவித்துள்ளனர்.கமிட்டி தலைவர் பர்கூரு ராமசந்திரப்பா, கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் இருப்பதால், அறிக்கை அளிப்பது தாமதமாகிறது.
பாடப்புத்தகங்களை அச்சிட ஆறு தொகுப்புகள் கொண்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதால், அடுத்த கல்வி ஆண்டு புதிய பாடப்புத்தகங்களை கொண்டு வருவது சாத்தியமில்லை.எனவே, 2018 - 19ம் ஆண்டிலிருந்து புதிய பாடப்புத்தகங்கள் செயல்பாட்டுக்கு வரும். மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கும் வகையில், பாடப்புத்தகங்கள் அமைக்கப்படும். வல்லுனர் கமிட்டி, அரசுக்கு அறிக்கை அளித்த பின், ஆசிரியர்கள் தொகுதியின் எம்.எல்.சி.,க்களுடன் கூட்டம் நடத்தி, அவர்களின் கருத்து, ஆலோசனை பெறப்படும்.மாநிலத்தில் எந்த அரசு பள்ளியும் மூடப்படாது. இவ்விஷயத்தில் யாருக்கும் சந்தேகமோ, அச்சமோ வேண்டாம். பெற்றோரும், மாணவர்களும் பயப்பட வேண்டாம்.அரசு பள்ளிகள் அபிவிருத்தி செய்யப்படும். அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த, 28 அம்சங்கள் கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.ஏழைகள், வசதியானவர்கள் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு அரசு கடிவாளம் போடும். தொழில்நுட்பம் அடிப்படையிலான கல்வி கற்பிப்பு திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)