TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் இனி எப்படி தேர்ந்தெடுக்க போகிறார்கள்?


 ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த பல சந்தேகங்களும் பலவிதமான கட்டுரைகளும் இணையம் செய்தித்தாள்களில் உலவி வருகின்றன இதனால் ஆசிரியர்கள் பலரும் குழப்பம் அடைந்துள்ள
னர். எனவே தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பற்றி எடுத்துரைக்க இந்த கட்டுரையை நண்பர்களுக்கு வெளியிடுகிறோம்.

                ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது இந்திய அரசின் மூலம் இயற்றபட்ட கட்டாய கல்விச்சட்டப்படி இத்தேர்வு எழுதுவது ஆசிரியர்களுக்கு  கட்டாயம்.
இதனை தமிழக அரசு நேரடியாக கொண்டுவரவில்லை ஒரு சில மாநிலங்களை தவிர்த்து அனைத்து  மாநிலங்களிலும் இவை நடைமுறையில் உள்ளது. எனவே NCERT விதிகள் படி ஆசிரியர் தகுத்தேர்வு நடைபெறுகிறது. இருப்பினும் ஒரு சில மாநிலங்கள் வெயிட்டேஜ் மற்றும் மதிப்பெண் தளர்வு போன்றவற்றை அறிவித்துள்ளது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது என்பதை நீங்கள் ஆந்திரா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தெரியும். 

 தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர் இனி தேர்ந்தெடுக்கும் முறை

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்து வந்த பாதை அனைவரும் அறிந்ததே வெயிட்டேஜ் முறை மற்றும் மதிப்பெண் தளர்வு குறித்த இரு வேறு வழக்கில் மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வேறு வேறு திர்ப்பை வழங்கியதால் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை உண்டு மற்றும் 5% மதிப்பெண் தளர்வு உண்டு அதாவது  82 மதிப்பெண் மேல் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என்று தமிழக அரசு அறிவித்த GO Ms. 71 மற்றும் GO Ms. 25 ஆகிய அரசாணைகள் செல்லும் இதன் மூலம் 2013 ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 55% மதிப்பெண் பெற்றால் போதும் என்று உச்சநீதிமன்றம் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. தமிழக அரசு எடுக்கும் முடிவே இறுதி எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது,

குழப்பம்
தற்போது விகடன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் கடந்த தேர்வில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் மூலம் ஆசிரியர் தேர்வு செய்யவுள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்த பேட்டி அளித்தவரை தொடர்பு கொண்டபோது என செய்தி வெளியிட்டுள்ளனர். எனவே இவை ஆசிரியர் தேர்வு வாரியம் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அளித்த பேட்டி இல்லை மேலும் இவை அதிகாரபூர்வ தகவல் இல்லை  அதாவது 55% மதிப்பெண் தளர்வு  கொண்ட GO Ms.25 அரசாணை தற்போது நடைமுறையில் உள்ளது வேறு எந்த புதிய அரசாணையும் இல்லை இது குறித்து அதிகாரபூர்வ வலைதளத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவே குழப்பம் தேவையில்லை 82 மதிப்பெண்  மேல் 2013 ல் பெற்றவர்கள்  தேர்ச்சி பெற்றவர்களே என்பதில் எந்த சந்தேகமும் குழப்பமும் தேவையில்லை... இனி வரும் தேர்வுக்கும் 55% மதிப்பெண் போதும்.

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு 
இன்னும் ஒரு வாரம் அல்லது இந்த மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து அறிவிப்பு வரும் அதில் 55% (82) மதிப்பெண் பெற்றால் போதும் என்றே அறிவிப்பு வரும் என்பதை எதிர்பார்க்கலாம் மேலும் வெயிட்டேஜ் உண்டு இவை நீதிமண்றங்களின் உத்தரவுப்படி வெளியிட்டுள்ளதால் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை. நவம்பர் மாதத்துடன் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயம் என்பதால் விரைவில் அறிவிக்கபடலாம் கேள்வித்தாள் மிக எளிமையாக அமைய வாய்ப்பு உள்ளதால் அதிக மதிப்பெண் பெற முயற்சிக்கவும். தற்போது இருந்தே படிக்கவும்.

இப்படிக்கு
கார்த்திக் பரமக்குடி

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)