டிசம்பர் 10ம் தேதிக்கு பிறகு ரயில் பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டு செல்லாது
புதுடெல்லி,ரயில், பேருந்து நிலையங்களில் பழைய 500 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் ஏற்கப்படாது
என -மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ந் தேதி ரூ-500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி களில் டிசம்பர் 31-ந் தேதி வரை கொடுத்து மாற்றிக் கொள் ளலாம் என்று அவகாசம் அளிக்கப் பட் டுள்ளது. அதன் பிறகும் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியில் மார்ச் மாதம் வரை கொடுத்து மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே பொது மக்களின் இயல்பு வாழ்க்கை யில் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பழைய 500 ரூபாய் நோட்டு களை அத்தியாவசிய சேவை களுக்கு மட்டும் பயன்படுத்த மத்திய அரசு விலக்கு அளித்தது. அதன்படி மருத் துவ மனைகள், பெட் ரோல் பங்குகள், விமான நிலை யங்கள், உள்ளிட்ட அத்தி யாவசிய சேவைகளில் பழைய 500 ரூபாய் நோட்டு கள் பெறப்பட்டன.போன் கட்டணம், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி செலுத்துபவர்களும் இந்த சலுகையால் சற்று நிம்மதி பெரு மூச்சு விட்டனர். 9,10,11,-ந் தேதிகளில் இந்த விலக்கு இருந்த நிலையில் பழைய ரூ.500 நோட்டுகளை அத்தியாவசிய பணிகளுக்கு பயன்படுத்த மேலும் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அதை ஏற்று நவம்பர் 24-ந் தேதி வரை பழைய ரூ-500 நோட்டுக்களை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கால நீட்டிப்பு செய்தது.ஆனால் 24-ந் தேதிக்கு பிறகும் மக்களிடம் பண புழக்கத்தில் சகஜ நிலை ஏற்படவில்லை. இதை கருத்தில் கொண்டு
பழைய ரூ-.500 நோட்டுக்களை டிசம்பர் 15-ந் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு பொது மக்கள் பயன்படுத்தலாம் என்று மேலும் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பழைய 500 ரூபாய் நோட்டு களை பயன்படுத்தும் கால அவகாசத்தில் மத்திய அரசு இன்று திடீரென மாற்றம் செய்ததுபழைய 500 ரூபாய் நோட்டுகளை அத்தியாவசிய சேவைகளுக்கு டிசம்பர் 15-ந் தேதி வரை பயன்படுத்தலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 2- ந்தேதி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.கடந்த 3-ம் தேதி (சனிக்கிழமை) முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகள் எங்குமே செல்லுபடி ஆகாது. டிசம்பர் 31-ந் தேதி வரை அவற்றை வங்கிகளில் மட்டுமே செலுத்த முடியும். “டிசம்பர் 3-ந் தேதி முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் நிரப்ப இயலாது, விமான நிலையங்களில் டிக்கெட் பெற இயலாது என்று கூறப்பட்டது.இந்நிலையில் ரயில், மெட்ரோ ரயில்,பேருந்துகளில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் டிசம்பர் 10ம் தேதிக்கு பின் ஏற்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.வரும் 15-ம் தேதி வரை பழைய ரூ.500 நோட்டுகள் செல்லும் என்ற அறிவிப்பில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.