ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானமா: மானியம் 'கட்!
ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானமா: மானியம் 'கட்!' : இதுவரை ஏமாற்றியவர்களுக்கு வந்து விட்டது கிடுக்கிப்பிடி!!!
ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம்
உள்ளோருக்கு, 'காஸ்' மானியம் இனி கிடையாது.
இதற்காக, வருமானம் அதிகம் உள்ளவர்கள் பற்றிய விபரங்களை, வருமான வரித்துறை
யிடம் பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை ஏமாற்றி, காஸ் மானி யம் வாங்கியவர்களுக்கு கிடுக்கிப்பிடி வந்து விட்டது.
சமையல் காஸ் சிலிண்டர் மானி யத்தை குறைக்க, மத்திய அரசு பல நடவடிக்கை களை எடுத்து வருகிறது. அதன்படி, சிலிண்டர் சப்ளை யில் முறை கேட்டை தடுக்க, வாடிக்கை யாளரின் வங்கிக் கணக்கில், மானிய தொகை நேரடியாக செலுத்தப் படுகிறது. மேலும் ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம்
வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து,வசதி படைத் தவர்கள்,சிலிண் டர் மானியத்தை விட்டு கொடுக் கும் படி,பிரதமர் மோடி வலியுறுத்தினார்.அவரது அழைப்பை ஏற்று, சிலர் மானியத்தை விட்டு கொடுத்தனர்.
இருப்பினும், மானிய செலவு குறையாததால், ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமா னம் உள்ளவர்களுக்கு காஸ் மானியத்தை நிறுத்த, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோரின் பெயர், முகவரி, மொபைல் எண், பான் எண் உள் ளிட்ட விபரங்களை வழங்கும்படி வருமானவரித் துறையிடம், பெட்ரோலிய அமைச்சகம் கோரியுள் ளது.
'விரைவில் நிறுத்தப்படும்' :
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் செலவுகளில், காஸ் மானிய செலவு அதிகம் உள்ளது. அதற்கு காரணம், வசதி படைத்த பலரும் மானிய சிலிண்டர் வாங்குதே.
தற்போது, வருமான வரித்துறை, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோரின் விபரத்தை வழங்க ஒப்புதல் அளித்துள்ள தால், விரைவில் அவர் களுக்கு மானியம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்