டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் !!


      நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்தி
ய அரசு தெரிவித்துள்ளது.

         கடந்த 8-ம் தேதி ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று  அறிவித்தது மத்திய அரசு. இதையடுத்து நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மீண்டும் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் வசூலிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

நிலைமை சீரடைந்து விட்டதாக கூறி சுங்கக்கட்டணம் வசூலை நெடுஞ்சாலைதுறை தொடங்குகிறது. டிசம்பர் 15-ம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)