ஒரு நாள் 25 மணி நேரமாக மாறுகிறது!
ஒரு நாளில் எனக்கு 24 மணி நேரம் பற்றாக்குறையாக உள்ளது. இன்னும் சில மணி நேரம் இருந்தால் நிறைய வேலைக
ளைச் செய்து சாதனை புரிவேன்’ என்று சொல்பவர்களுக்கு எல்லாம் நற்செய்தி காத்துக்கொண்டிருக்கிறது.
பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக தன்னை நீடித்துக்கொள்ள இருக்கிறது.
பூமி ஒவ்வொரு நூற்றாண்டிலும் தன்னைத்தானே சுற்றி வருவதற்கு 2 மில்லி விநாடிகள் அதிகமாக எடுத்துக்கொண்டு வருகிறது என்று அமெரிக்க புவியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி பூமி சுற்றிவரும் நேரத்தில் ஏற்படும் மாற்றங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நிகழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பூமி பல சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டுவந்துள்ளது. அவற்றில் முக்கிய மாற்றம் காற்றின் அடர்த்தி கூடியது. தூசுகள், வாயுக்கள் காற்றில் அதிகரித்து வருவதால் காற்றில் அடர்த்தி அதிகரித்து பூமி சுற்றிவரும் நேரத்தின் அளவு அதிகரிக்கும் நிலையை எட்டியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். பூமி சுற்றும் நேரத்தின் அளவு கூடுவது தொடருமானால், இன்னும் 2 மில்லியன் நூற்றாண்டுகளில் பூமியின் சுற்றும் நேரம் 25 மணி நேரத்தை எட்டிவிடும் என்று உறுதியாகக் கூறுகின்றனர். மேலும், இந்த நிகழ்வுக்கு நிலவின் ஈர்ப்பு சக்தியும் காரணமாக இருக்கலாமா என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.