அறிவியல் செயல்முறை கூடம் 27–ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கான அறிவியல் செயல்முறை கூடம் 27–ந் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
பள்ளிகளில் 7, 8, 9–வது வகுப்பு படிக்கும் மாணவர்கள்
பயன்பெறும் வகையில் அவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி வருகிற 27–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை 3 நாட்கள் அறிவியல் செயல்முறை
கூடம் நடத்த வேலூர் மாவட்ட அறிவியல் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் செயல்முறைக்கான பொருட்கள் இம்மையத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் தாங்களாகவே அறிவியல் உபகரணங்களை வடிவமைத்து அடிப்படை அறிவியல் தத்துவங்களை அறிந்து கொள்ளலாம். இதற்கு உதவியாக வீடியோ பட காட்சியும், வழிகாட்டும் முறைகளுடன் கூடிய வசதிகள் இம்மையத்தில் ஏற்டுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி மேற்கண்ட 3 நாட்களிலும் காலை 11 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணி என இரண்டு வேளை நடைபெறும். ஒரு வேளைக்கு 20 மாணவர்கள் மட்டுமே இச்செயல்முறை கூடத்தில் பங்குபெற முடியும். 120 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதலில் பதிவு செய்யும் மாணவர்களின் வரிசைப்படி 20 பேர் அடங்கிய குழுவாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு நாட்களில் பங்குபெற அனுமதிக்கப்படுவர். முன்பதிவிற்கு வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட அறிவியல் மைய அலுவலர் துரைராஜ் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.