கடன் தவணை செலுத்த மேலும் 30 நாள் கால அவகாசம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால், வீடு, கார், பயிர்க்கடன் உள்பட ரூ.1 கோடிக்கு உட்பட்ட கடன்களை பெற்றவர்கள், கடன் தவணையை செலுத்த
ரிசர்வ் வங்கி 60 நாட்கள் கால அவகாசம் அளித்தது. இந்த சலுகை, கடந்த நவம்பர் 21–ந் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடன் தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி மேலும் 30 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது. இதுபற்றிய அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
கடந்த நவம்பர் 1–ந் தேதியில் இருந்து டிசம்பர் 31–ந் தேதிவரை செலுத்த வேண்டிய கடன் தவணைகளுக்கு இச்சலுகை பொருந்தும். ஜனவரி 1–ந் தேதிக்கு பிறகு செலுத்த வேண்டிய கடன் தவணைகளை பொறுத்தவரை, கடன் வழங்கிய நிறுவனங்களே முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.