32 பேருக்கு 'தமிழ்ச் செம்மல்' விருது: டிச.20-க்குள் விண்ணப்பிக்கலாம்


     விருது மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்படும் 'தமிழ்ச் செம்மல்' விருதுக்கு இம்மாதம் 20-ம்
தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
     இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014-ல் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அமைப்பு வைத்து அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்தம் தமிழ் தொண்டினை பெருமைப்படுத்தி,
ஊக்கப்படுத்தும் வகையில் 'தமிழ்ச் செம்மல்' என்ற விருதை அறிவித்தார். இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.25,000/- பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த விருது மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் (32 பேருக்கு) வழங்கப்படும். அந்த அறிவிப்பிற்கிணங்க 2016-ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு அவற்றுடன் நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களில் 20.12.2016 ஆம் நாளுக்குள் அளிக்கப்படவேண்டும்.
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)