3G போனிலும் விரைவில் ரிலையன்ஸ் ஜியோ !!
ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை 3ஜி போனிலும் உபயோகிக்கும் வகையில் அதிவிரையில் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் தயாரிக்கவிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Image result for jio
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தொலைத் தொடர்புச் சந்தையில் அறிமுகமானது. அறிமுகமான நான்கு மாதங்களில் சுமார் 5.5 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ நெட்வொர்க் ஈர்த்துள்ளது. மேலும், இந்த நிதியாண்டின் முடிவுக்குள் (மார்ச் 31) ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 10 கோடியாக உயர்த்த ஜியோ இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக சமீபத்தில் அதன் இலவச காலத்தை டிசம்பர் 31ஆம் தேதியிலிருந்து மார்ச் 31ஆம் தேதியாக நீட்டித்தது ஜியோ நிறுவனம்.
எனவே இக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், இதன்மூலம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என்பதாலும் 3ஜி ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை ஜியோ நிறுவனம் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலமாக 3ஜி ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்களும் ஜியோ சிம் கார்டைப் போட்டு உபயோகிக்க இயலும்.