7 மாத பெண் குழந்தை வயிற்றில் மற்றொரு குழந்தை டாக்டர்கள் அதிர்ச்சி!!!
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்தது
.
கடந்த 2 மாதங்களாக குழந்தை அடிக்கடி ஓயாமல் அழுது வந்துள்ளது. இதனால், பெற்றோர் அப்பகுதியில் உள்ள
மமருத்துவமனையில் குழந்தையை காட்டியபோது, வயிற்று வலி காரணமாக அழுகிறது என கூறி மருந்து கொடுத்து அனுப்பினர்.
இருப்பினும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை என்பதால் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் வயிற்றில் கட்டி உள்ளது, அதை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றவேண்டும் என தெரிவித்தனர்.
அதன்படி கடந்த 15ம் தேதி அறுவை சிகிச்சை செய்தபோது குழந்தையின் வயிற்றில் வளர்வது கட்டி அல்ல, அது மற்றொரு சிசு என்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையின் வயிற்றில் இருந்த அந்த சிசுவை அகற்றியுள்ளனர். குழந்தையின் எடை சுமார் 7 கிலோவாக இருந்த நிலையில் அதன் வயிற்றில் வளர்ந்த சிசு சுமார் 100 கிராம் இருந்தது.
இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவிக்கையில், 5 லட்சம் குழந்தைகளில் ஒன்றுக்கு இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது, மருத்துவ வரலாற்றில் இதுவரை 200 முறை இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
குழந்தை தனது தாயின் வயிற்றில் தரித்த பின்னர், தம்பதியர் தாம்பத்திய உறவில் ஈடுபட்டிருக்ககூடும். அப்போது தந்தையின் விந்தணுக்கள், தாயின் வயிற்றில் இருந்த அந்த பெண் குழந்தையின் கருவறைக்குள் நீந்தி சென்றதால் தான் இந்த விளைவு ஏற்பட்டிருக்கும். இதுதான் குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு உருவாக காரணமாக அமைந்தது என அந்த டாக்டர் தெரிவித்தார்.