'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஊக்குவிக்க பரிசு திட்டங்கள்
புதுடில்லி:ரொக்கமின்றி, 'டிஜிட்டல்' முறையில், பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மக்களுக்கு பரிசுத்
திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் முறையிலும், எலக்ட்ரானிக் முறை யிலும் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்ப தில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனால், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என, அரசு நம்புகிறது.
இந்நிலையில், டிஜிட்டல் முறையில், பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில்,
மக்களுக்கு பரிசுத் திட்டங்கள் தயாரிக்கும்படி, என். பி.சி.ஐ., எனப்படும், இந்திய தேசிய பணம் செலுத்து தல் கழகத்திடம், அரசுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பான, 'நிடி ஆயோக்' கேட்டுக்கொண்டுள்ளது.
'நிடி ஆயோக்' அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்த னைகள் சிறப்பான வகையில் அதிகரித்துள்ளன. அனைத்து தரப்பினரும், டிஜிட்டல் முறை பரிவர்த்தனையை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
மக்களை ஊக்குவிக்கும் வகையில், பரிசுத் திட்டங் களை, அரசு அறிவிக்கும். டிஜிட்டல் முறையில் பரி வர்த்தனை செய்வோருக்கு, இரு கட்டமாக ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும், குலுக் கல் முறையில், பரிசுக்கு உரியோரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மற்றொரு கட்டமாக, காலாண்டுக்கு ஒரு முறை, பெரியளவில் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.
ஏழைகள், நடுத்தர மற்றும் சிறு வர்த்தகர்களை குறிவைத்து, இந்த திட்டங்கள் தயாரிக்கப்படும்.
பரிசுத் திட்டங்கள் குறித்த விரிவான வழிகாட்டு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். நவ., 8க்கு பின், டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் அனை வருக்கும், பரிசு பெறத் தகுதி உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.