வாகன பதிவுக்கு இனி 'பார்க்கிங் சர்டிபிகேட்!!
பொது இடங்களில், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில், புதிதாக வாகன பதிவு செய்யும் போ
து, வாகன நிறுத்துமிடம் இருப்பதற்கான சான்றிதழ் தருவது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.
அரசு பரிசீலனை :
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, கழிப்பறைகளை அதிகம் கட்ட, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கழிப்பறைக்கு இடம் ஒதுக்கப்படாமல், எந்த ஒரு கட்டுமானத்திற்கும் இனிமேல் அனுமதி பெற முடியாது. இது, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது; விரைவில் அமலுக்கு வரும்.
விரைவில் அறிவிப்பு:
அதுபோலவே, சாலைகள் மற்றும் தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதால், பெருமளவு இட நெருக்கடி ஏற்படுகிறது. வாகனத்தை நிறுத்துவதற்கான இடம் இருந்து, அதற்கான சான்றிதழ் பெற்றால் மட்டுமே, புதிய வாகனங்களை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படும்; இந்த திட்டம் குறித்து, சாலை போக்குவரத்து அமைச்சகத்துடன் பேசி வருகிறோம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் பேசினார்.