எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: தத்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்பு


       எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பத்தைச்
சமர்ப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

      இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
2017-ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட உள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது. 

கடைசித் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு, தத்கல் முறையில் விண்ணப்பிக்க இப்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, வருகிற 5,6,7ஆகிய தேதிகளில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று, ஆன்-லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். 
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)