சமச்சீர் கல்வி; உயர்நீதிமன்றம் அரசுக்கு நோட்டீசு!!!
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை கோ
ரியதை, தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (நீதித்துறை) இளங்கோவன் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் ஒன்று முதல் 10 ம் வகுப்புவரை நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை ஒழுங்குபடுத்தி, மேம்படுத்தி, தரமான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பதிவாளர் மனு செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.நாகமுத்து கொண்ட அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.
இவ்விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு உதவ நடுநிலை அறிவுரையாளராக மூத்த வழக்கறிஞர் ஐசக்மோகன்லாலை நியமிக்கிறோம். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.