முழுநேர முனைவர் பட்டத்துக்கு ஊக்கத்தொகை: எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முழுநேர முனைவர் பட்டம் பயிலும் தாழ்த்தப்பட்ட -பழங்குடியின மாணவர்கள் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொ
கை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
முனைவர் பட்டம் பெறும் மாணவர்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவருக்கு அனுமதிக்கப்பட்ட படிப்புக் பிரிவுக் கால அளவுக்கு மட்டும் ஊக்கத்தொகை அளிக்கப்படும். முதல் ஆண்டு சேர்க்கையின் அடிப்படையில், இந்தத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இரண்டாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை மாணவர் பயிலக்கூடிய படிப்புப் பிரிவின் துறை தலைமை அலுவலர், ஆராய்ச்சி வழிகாட்டி அலுவலரால்
முந்தைய ஆண்டுகளால் மாணவரால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் திருப்திகரமானமுன்னேற்றம் குறித்து அளிக்கப்படும் சான்றிதழின் அடிப்படையில் ஊக்கத்தொகை கொடுக்கப்படும். முழுநேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 700 மாணவர்களில் கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு, பொறியியல் பிரிவு மற்றும்பிற பிரிவுகள் போன்றவற்றுக்கு அந்தந்த ஆண்டுகளில் விண்ணப்பிக்கும் மாணவ -மாணவியர்களின் எண்ணிக்கைக்கேற்பதேவையான விகிதாச்சார எண்ணிக்கையில் பிரித்து வழங்கப்படும்.விண்ணப்பப் படிவத்தை தட்டச்சு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநர், ஆதிதிராவிடர் நலத் துறை, எழிலகம் இணைப்புக் கட்டடம், சேப்பாக்கம், சென்னை-5.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி:
http://www.cms.tn.gov.insitesdefaultfilesformsPhdFTincer