ஓய்வூதியர் உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு


     ஓய்வூதியர்கள் உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, ஜன., 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


      இதுகுறித்து, பி.எப்., என்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின், சென்னை மண்டல முதன்மை ஆணையர் சலில் சங்கர் வெளியிட்ட அறிவிப்பு: ஓய்வூதியம் பெறுவோர், உயிர் வாழ் சான்றிதழ், மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க, ஜன., 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.  

வங்கியில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஓய்வூதியர்கள், jeevan pramaan portal என்ற, இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம்.இந்த வசதியை, பொது சேவை மையம், அரசின், இ - சேவை மையங்கள் வழியாகவும் பெறலாம். பி.எப்., அலுவலகத்தையும் அணுகலாம். இந்த மையங்களுக்கு செல்லும் போது, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஓய்வூதிய வழங்கு ஆணை, மொபைல் போன் போன்றவற்றை கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)