மருத்துவம் படித்தவர்கள் சிகிச்சை அளிக்க "நெக்ஸ்ட்' தகுதித் தேர்வு


        அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பயின்றவர்கள், பதிவுபெற்ற மருத்துவர்களாகச் சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், தேசிய அளவிலா
ன தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்கான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மருத்துவக் கல்லூரிகளில் கல்வியின் தரம், அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எம்.பி.பி.எஸ். முடித்து வெளியேறும் மருத்துவர்களுக்கு "நெக்ஸ்ட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்று "நிதி ஆயோக்' அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
அதனடிப்படையில், புதிய மசோதா ஒன்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வடிவமைத்துள்ளது. இந்த மசோதாவை, பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக சுகாதாரத் துறை அமைச்சகம், தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வரும் 6-ஆம் தேதி வரை, பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம்.
இதுதவிர, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் அந்த மசோதா பரிந்துரை செய்துள்ளது என்றார் அவர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)