என்ஜினீயரிங் படிப்புக்கும் பொது நுழைவுத்தேர்வு மத்திய அரசு பரிசீலனை
‘நீட்’ தேர்வு போன்று என்ஜினீயரிங் படிப்புக்கும் பொது நுழைவுத்தேர்வு மத்திய அரசு பரிசீலனை!!!
மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக ‘நீட்’ எனப்படும் மருத்துவ பொது நு
ழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதே போன்று, என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.இதுதொடர்பானஆலோசனை, முன்னேறிய கட்டத்தில் இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், இத்தகைய தேர்வு, 2018–ம் ஆண்டில் இருந்துதான் அமலுக்கு வரும் என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.‘‘என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடுகளை தடுக்கவும், மாணவர் சேர்க்கையில் வெளிப்படை தன்மையை உருவாக்கவும் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு விரும்புகிறது’’ என்று மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.