டெபாசிட் ஆவணங்களை பாதுகாக்க வங்கிகளுக்கு அரசு உத்தரவு!!!
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மூலமும், பிற நோட்டுகள் மூலமும் பொதுமக்கள் பணத்தை டெபாசிட் செய்ததற்கான ஆவணங்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமென்று பொ
துத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு கடந்த ஒரு மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.12 லட்சம் கோடியில் இருந்து ரூ.15.4 லட்சம் கோடி வரை வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பொதுமக்கள் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தபோது பூர்த்தி செய்து அளித்த படிவங்கள் அனைத்தையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அதில் வாடிக்கையாளரின் முகவரி, செல்லிடப்பேசி எண், எத்தனை ரூபாய் நோட்டுகள், எந்த மதிப்பில் டெபாசிட் செய்யப்பட்டன? என்ற விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.