மெக்கானிக் விண்கலம் தயாராகிறது!
விண்வெளி குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள உலக நாடுகள் தங்களின் சார்பில் பல விண்கலங்களை
விண்ணுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
டெக்னாலஜியின் வளர்ச்சி பெரிய கட்டத்தை எட்டிவரும் நிலையில் பல விண்கலங்கள் வானில் சுற்றி விண்வெளி குறித்த பல அரிய விஷயங்களை விண்கலங்கள் கண்டுபிடித்து வருகின்றன.
அதில் பழுதானவை மற்றும் பழுதாகதவைகள் என இரண்டு வகையிலும் இருக்கின்றது. பழுதான விண்கலங்கள் பெரும்பாலும் வானிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். பழுதாகி சுற்றிக் கொண்டிருக்கும் விண்கலம் அதிக அளவில் பயன்படாதவைகளாகவே இருக்கும். ஆனால், சில சமயங்களில் உபயோகத்தில் இருக்கும் விண்கலங்கள் பழுதடைந்து செயலற்று விண்ணில் சுற்றும் போது ஆராய்ச்சி கூடத்தில் இருந்தபடியே விண்கலத்தை பழுது நீக்கிவிடலாம் என்றாலும் அதனை மேலும் எளிதாக்கும் நோக்கில் Restore-L என்ற விண்கலத்தினை தயாரிக்க இருக்கின்றனர் நாசா ஆராய்ச்சியாளர்கள்.
இந்த மூலம் விண்ணில் பழுதாகும் விண்கலத்தை விண்ணிலேயே பழுது பார்த்து இயங்க வைத்துவிடலாம். இதற்கு Restore-L விண்கலம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 2020ஆம் ஆண்டின் இறுதியில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டிருக்கும் நாசா தற்போது இதனுடைய ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறது. பழுதடைந்த நிலையில் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்கலங்களின் மீது எரிகற்கள் விழுந்து உடைந்தால், அவை ஒவ்வொன்றாகச் சென்று மற்ற விண்களங்களை மோதக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இப்படி ஒரு முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள்.