பெட்ரோல் நிலையத்தில் டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்துவதா?... வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை
வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும்போது மின்னணு அட்டைகளைப் பயன்படுத்த ஊக்கத் தொகையை அரசு அறிவித்துள்ள நிலையில், அதனால், பெட்ரோல் பங்க்கு
களில் விபத்து நேரலாம் என வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெட்ரோலிய அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்த அமைப்பு, பெட்ரோல் விநியோகிக்கும் பம்ப் அருகே மின்னணு கருவியில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட தூரத்துக்கு பிறகே அவற்றை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அறிவிப்பு வெளியிடுமாறு
மத்திய அரசுக்கு வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டாளர் கடிதம் எழுதியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது