பாஸ்போர்ட் பெற விதிமுறைகள் தளர்வு.... பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை


       பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தி வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
           இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளி
யிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 1989ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.

              பிறப்புச் சான்றிதழ் இருந்தால் அதை அளிக்கலாம் என்றும் அதற்கு பதிலாக வேறு சில ஆவணங்களில் ஏதாவது ஒன்றைத் தரலாம் என்றும் அறிவி‌க்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி இடம்பெற்றுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழ், பள்ளி இறுதிச் சான்றிதழ் ஏதாவது ஒன்றை அளிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிச் சான்றிதழ் அல்லது கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழையும் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி இடம்பெற்றுள்ள பான் கார்டு, ஆதார் கார்டு, மின்னணு ஆதார் சான்று இவற்றில் ஏதாவது ஒன்றையும் பாஸ்போர்ட் பெற ஆவணமாகத் தரலாம் என கூறப்பட்டுள்ளது. பிறந்த தேதி இடம்பெறும் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை இதில் ஏதாவது ஒன்றையும் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ள காப்பீடு பாலிசி ஆவணத்தையும் காட்டி பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank