மாநகராட்சி, சி.எம்.டி.ஏ.வில் உள்ள ‘காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பி ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்’ ஐகோர்ட்டு உத்தரவு!!!
சென்னை, மாநகராட்சி, சி.எம்.டி.ஏ.வில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவாக நிரப்பி ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத கட்டிடங்கள்செ
கட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமீறல் கட்டிடங்களை இடித்து தள்ள அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து இந்த சட்டவிரோத கட்டிடங்களை முறைப்படுத்தக்கோரி ஐகோர்ட்டில் பலர் மேல்முறையீடு செய்தனர்.இதனால் இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ வழக்கறிஞர் வி.சுரேஷ் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.விதிமுறை மீறல்அப்போது வழக்கறிஞர் வி.சுரேஷ் தனது அறிக்கையை சமர்ப்பித்தார். அதுபோல மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:-சென்னை மாநகரில் ஜார்ஜ் டவுன், சவுகார்பேட்டை மட்டுமின்றி தியாகராயநகர், திருவான்மியூர், அடையாறு என அனைத்து பகுதிகளிலும் விதிமுறை மீறல்கள் அதிகம் உள்ளது. கட்டிடங்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்குவது, விதிமுறை மீறுவதை கண்காணிப்பது என ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டிய அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் முடங்கிப் போய் உள்ளனர்.துணிச்சலாக ஆக்கிரமிப்புதற்போதுள்ள அதிகாரிகளால் விதிமுறை மீறல்களை திறமையாக தடுக்க முடியவில்லையா? இல்லை புதிதாக வேறு ஏதாவது நடைமுறையை அமல்படுத்த வேண்டுமா? என ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதேபோல விதிகளை மீறும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் சட்டம் குறித்து எந்த பயமும் கிடையாது.
இதனால் அவர்களும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. இதனால் துணிச்சலாக ஆக்கிரமிப்பிலும், விதிமீறலிலும் ஈடுபடுகின்றனர்.இதுவரை 65 ஆயிரத்து 529 விண்ணப்பங்கள் கட்டிட வரைமுறை தொடர்பான மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதிலிருந்தே எவ்வளவு சட்டவிரோதம் நடந்துள்ளது என்பதும், வழக்கின் ஆழமும் அப்பட்டமாக தெரிகிறது. சட்டவிரோத கட்டிடங்களை முறைப்படுத்தக்கோரி கொடுக்கப்பட்ட மனுக்களில் 86 சதவீத மனுக்களை சி.எம்.டி.ஏ. நிராகரித்துள்ளது. வெறும் 2 சதவீத மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு விதிமீறல்கள் இருக்கிறது.ஆவணங்கள் வழங்க வேண்டும்வழக்கறிஞர் சுரேஷ், ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ள ஜார்ஜ் டவுன் மற்றும் ஆர்மீனியன் தெரு ஆகிய 2 பகுதிகளை விரிவாக ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு தேவையான ஆவணங்களை மாநகராட்சியும், சி.எம்.டி.ஏ.வும் வழங்கி உதவ வேண்டும். அதுபோல ஐகோர்ட்டு பதிவுத்துறையும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், விதிமுறை மீறல்கள் தொடர்பாக இதுவரை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளையும் வழக்கறிஞர் சுரேஷிற்கு வழங்க வேண்டும்.சி.எம்.டி.ஏ. மற்றும் மாநகராட்சியில் உள்ள காலியிடங்களை நிரப்பாத காரணத்தால் தான் இந்த ஆக்கிரமிப்புகள் பெருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த காலிப்பணியிடங்களை எவ்வளவு விரைவாக நிரப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக நிரப்பி ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும்.எனவே மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.வில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வை 2 வாரத்தில் நடத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.