தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது


        தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னிச்சையாக முதல்வர்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, தகுதித் தேர்வு எழுதிய பிறகு தேர்வுக்குழுதான் முதல்வர்களை நியமிக்கும் என்று
சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
      முதல்வர்களுக்கான தகுதித் தேர்வு சிபிஎஸ்இ, மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இ பிரதிநிதிகள் ஆகியோருக்கு முதல்வர் தேர்வில் வீட்டோ அதிகாரம் உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் தன்னாட்சி இழக்கப்படவுள்ளது.

       எனவே பள்ளி முதல்வராக விரும்பும் ஆசிரியர்கள் முதல்வர் தகுதித் தேர்வு (Principal Eligibility Test-PET) எழுதியாக வேண்டும் என்று சிபிஎஸ்இ முடிவெடுத்துள்ளது.

         ஏற்கெனவே முதல்வர்களாக இருப்பவர்களும் தேர்வு எழுதியாக வேண்டும். ஆனால் இந்த புதிய விதிமுறை அரசுப் பள்ளி முதல்வர்களுக்குப் பொருந்தாது.

         புதிய விதிமுறைகளின் படி, முதல்வர் தேர்வுக்குழுவில் உள்ளவர் பள்ளிகள் நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவராகவோ அல்லது கல்விப்புலம் சார்ந்தவராகவோ இருப்பது அவசியம் இவர் நிர்வாகக் கமிட்டி, சிபிஎஸ்இ ஆலோசனையுடன் தேர்வுக்குக் குழுவுக்கு நியமிக்கப்படுவர். மேலும் இந்தக் குழுவில் சிபிஎஸ்இ பரிந்துரைக்கும் நபர் ஒருவரும் மாநில கல்விச் சட்டத்தின் படி மாநில அரசு நியமிக்கும் நபர் அல்லது நபர்களும் இடம்பெற்றாக வேண்டும்.

        இதில் வீட்டோ அதிகாரம் என்ற தனிப்பட்ட அதிகாரம் மேற்கூறிய குழுவில் கடைசி 2 பிரிவுகளில் உள்ளவர்களுக்கே.

சுருக்கமாக சிபிஎஸ்இ அல்லது மாநில அரசு பிரதிநிதிகளால் மறுக்கப்படும் நபர் தனியார் பள்ளிகளில் கூட முதல்வராக முடியாது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)