Snapdeal வீடு தேடி வரும் 2000 ரூபாய் அது எப்படி??
வீடு தேடி வரும் 2000 ரூபாய்க்கு 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் 'Snapdeal' - இனி ஏடிஎம் தேவையில்லை..!!!வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க மக்கள் காத்திருப்பதைத்
தவிர்க்கும் வகையில், ஸ்நாப்டீல் ஆன்-லைன் நிறுவனம், வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு ரூ. 2 ஆயிரம் பணத்தை தரும் வசதியை
அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள், ஸ்நாப்டீல் நிறுவனத்தின் இணையதளத்தில் ரூ. 2ஆயிரம் கேட்டு முன்பதிவு செய்தால், அந்த நிறுவனத்தின் சார்பில் ஆட்கள் வீட்டுக்கே வந்து பணம் அளிப்பார்கள்.
இதற்காக ஸ்நாப்டீல் நிறுவனம் கேஷ்@ஹோம் சேவை என்ற தளத்தை தனது இணையதளத்தில் உருவாக்கி உள்ளது. இந்த தளத்தில் சென்று, நாம் ரூ.2 ஆயிரம் ஆர்டர் செய்தால், ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நமக்கு பணத்தை அந்த நிறுவனம் வீட்டுக்கே அளிக்கும். இந்த ஆர்டரில் தனிநபர் ஒருவர் ரூ. 2 ஆயிரம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
இந்த பணத்தை ஸ்நாப்டீல் நிறுவனத்தின் சார்பில் ஒருவர் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பார். அவரிடம் இருக்கும் ஸ்வைப்பிங்மெஷினில் நாம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் நாம் ரூ. 2 ஆயிரம் பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இதற்கான கட்டணமாக ஒரு ரூபாய் மட்டுமே ஸ்நாப்டீல் நிறுவனம் வசூலிக்கிறது.
ஸ்வைப்பிங் மெஷின் இந்த குறிப்பிட்ட வங்கியின் கார்டுதான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை கிடையாது. எந்த வங்கியின்கார்டுகளையும் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யலாம்.
இது குறித்து ஸ்நாப்டீல் நிறுவனத்தின் நிறுவனர் ரோகித்பன்சால் கூறுகையில், “ ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையையும் நிறைவு செய்வதே எங்களின் நோக்கமாகும். தற்போது நாட்டில் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கான விழிப்புணர்வு நடந்து வருகையில், அதற்கான ஒத்துழைப்பாக இதை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.