Space X தோல்வி: விழிபிதுங்கும் நிறுவனம்!


     நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் உலகளவில் முதன்மையான ஆராய்ச்சி அமைப்பு என்பது அனைவரும் அறிந்ததே. நாசாவின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து
வருவது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு தேவையான பொருட்களைத் தயாரிக்கும் Space X நிறுவனமாகும்.



நாசாவில் இருந்து அனுப்பப்படும் விண்கலம் அனைத்தும் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படுபவை. மக்களை பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் இடையே விண்கலம் மூலம் பயணிக்க வைக்கவேண்டும் என்ற திட்டம் தான் Space X நிறுவனத்தின் மிகப்பெரிய எதிர்காலக் கனவு. மெக்ஸிகோவில் நடைபெற்ற 67வது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டிலும் இத்திட்டத்தைப் பற்றி தெளிவாக விளக்கினார் அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்.

இதுகுறித்து பல கட்ட ஆராய்ச்சிகளும், வேலைகளும் நடந்துவந்த நிலையில், Space X நிறுவனம் இந்தாண்டு விண்ணுக்கு அனுப்பிய விண்கலங்களில் நான்கு விண்கலங்கள் செயலிழந்து கடலில் விழுந்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் இந்த நான்கு விண்கலமும் செவ்வாய் கிரகத்துக்கு மக்களை அனுப்ப வேண்டி தொடங்கப்பட்ட ஆராய்ச்சியின் தொடக்கம் என்பது தான்.

2020-க்குள் 100 முதல் 200 பயணிகளை செவ்வாய் கிரகத்துக்கு கொண்டு செல்லும் விண்கலத்தை தயாரித்துவிடுவோம் என அதன் நிறுவனர் எலான் மஸ்க் விண்வெளி மாநாட்டில் தெரிவித்தார். இதனால், Space X நிறுவனம் இலக்கை எட்டிவிட வேண்டும் என தன் மீது டென்ஷனை போட்டுக் கொண்டு சொதப்பி வருகிறது என்பதை அறிவியல் வல்லுனர்கள் யூகித்துள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)