15,500 காவலர் பணி: ஐந்து லட்சம் அப்ளிகேஷன்!!!
தமிழக காவல் துறையில் 2012ஆம் ஆண்டிலிருந்து காவல்துறை பணிக்கான நியமனங்கள் நடைபெறவில்லை.
2013இல் ‘யூத் போலீஸ்’ என்று நியமனம் பலன் இல்லாமல் போனது. காவல் துறையில் அதிக காலியிடங்கள் உள்ள நிலையில், தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும் தமிழக காவல்துறை தலைவருமான
டி.கே.இராஜேந்திரன் உத்தரவின் அடிப்படையில், 15,500 காவலர்களை புதிதாக நியமிக்க, சுமார் 5 லட்சம் அப்ளிகேஷன் தயார் செய்யப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன.
இதுகுறித்து ஜனவரி 23ஆம் தேதி ஆளுநர் உரையில் அறிவிப்பு வரவிருப்பதால், 24ஆம் தேதி முதல் அப்ளிகேஷன் விற்பனை செய்யப்படும் என்று டிஜிபி அலுவலகம் தெரிவிக்கிறது.