பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்


            பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)