முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்வு
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு வழங்கப்படும் ரூ.1.50 லட்சத்தை ரூ.2 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இதேபோல் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.35 கோடி தொகுப்புடன் நிதி உருவாக்கப்படும். சிறப்பு அறுவை சிகிச்சை செய்பவர்கள் எந்த செலவையும் செய்ய வேண்டியதில்லை. இதுவரை 1.58 கோடி குடும்பங்கள் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டைகள் பெற்றுள்ளன. மேலும் திட்டம் குறித்து தகவல் மற்றும் புகார் அளிக்க 1800 425 3993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.