பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வு: தமிழில் எழுதிய மாணவர்கள் 20 சதவீதம் தேர்ச்சி.
தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் (என்.சி.இ.ஆர்.டி) நடத்தப்பட்ட,
பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு மற்றும் திறனறித் தேர்வில் தமிழ் வழியில் படித்து தமிழிலேயே தேர்வு எழுதிய 20 சதவீதம் பேர் தேர்வாகி உள்ளனர்.
6 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிப்பதற்காக தேசிய அளவில் அறிவியல் விழிப்புணர்வுமற்றும் திறனறித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக ஒரு வகுப்புக்கு20 பேர் வீதம் ஒவ்வொரு மாநிலத்திலும் 120 பேர் தேர்வு செய்யப்படுவர்.
இதுகுறித்து பேசிய இந்தத் தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கண்ணபிரான், “செய்முறை தேர்வுகள் 120 மாணவருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அவர்களில் இருந்து 18 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அந்த 18 பேரில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த 12 பேரும் அடுத்தகட்டமாக தேசிய அளவில் டெல்லியில் நடத்தப்படும் திறனறி பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர்’’ என்று சொன்னார்.