2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும்​ ? - படிக்க மிஸ் பண்ணிடாதீங்க...

  பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை, 
ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பு, வேலைவாய்ப்பு, வரி உயர்வு, வரி குறைப்பு உள்ளிட்ட பல அறி
விப்புகளும், பலசலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




1. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல எதிர்ப்புகள் , விமர்சனங்கள் வெளியாகின. . அந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும், பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும் சலுகைகள், அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள், மின்னனு பரிமாற்றம் ஆகியவைகள் மூலம் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பலசலுகைகள், வரி குறைப்புகளை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஜி.எஸ்.டி. வரி(சரக்கு மற்றும் சேவை வரி)

வரும் ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநிலங்கள், மத்தியஅரசு இடையே சில விசயங்களில் கருத்து வேற்றுமை நிலவியதால், ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது. அது குறித்த வரி வீதம், மாநில அரசுகள் எவ்வளவு வரிவருவாயை பிரித்துக்கொள்ளும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம். நாடுமுழுவதும் ஒரே சீரான மறைமுக வரி அமலுக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3. வருமான வரி

ஜி.எஸ்.டி. வரியைத் தொடர்ந்து, வருமானவரியில் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைப்புத்தொகை, காப்பீடு ப்ரீமியம் எடுத்தல், பரஸ்பர நிதி ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வரிச்சலுகை இருக்கும். வருமான வரி உச்சரவரம்பும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

4. கார்ப்பரேட் வரி

கார்ப்பரேட் வருமானவரியை பட்ஜெட்டில் 1.25 சதவீதம் முதல் 1.50 சதவீதம் வரை குறைத்து 28.50 சதவீதமாகக் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், புதிய நிறுவனங்களை சந்தைக்குள் கொண்டு வருவதற்கான சலுகை அறிவிப்புகளும் இருக்கும் எனத் தெரிகிறது.

5. ரெயில்வே

ரெயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறையால், ரெயில்வேயின் தனித்தன்மை பாதிக்கப்படாது என்றபோதிலும், ஆண்டுக்கு ஈவுத்தொகையாக ரூ. 10 ஆயிரம் கோடி அரசுக்கு கொடுப்பதை ரெயில்வே கொடுக்கத் தேவையில்லை. பயணிகளின் வசதிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பயணிகள் கட்டணம் உயர்த்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

6. விவசாயம்

ரூபாய் நோட்டு தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சுமையையும், வேதனையையும் குறைக்க நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பல சலுகைகளை அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே நவம்பர்,டிசம்பர் மாத கடன் வட்டி தள்ளுபடி கொடுக்கப்பட்ட நிலையில், பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம் .

7. தொழில்துறை, உற்பத்திதுறை

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்வகையில் தொழில்துறைக்கும், வேலைவாய்ப்பை பெருக்கவும் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்படலாம். வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க தனித்திட்டம் வகுக்கப்படலாம். சீனாவைப் போல், தொழிற்சாலைகளுடன், தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகள், மால்கள் என அனைத்தும் ஒருங்கே இருக்கும் வகையில் திட்டம் அறிமுகமாகலாம்.

8. அன்னிய முதலீடு

வெளிநாடு வாழ் இந்தியர்கள், அன்னிய நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டங்கள், சலுகைகள் அளிக்கப்படலாம். அவர்கள் அதிகளவு முதலீடு செய்யும் வகையில், விதிகள் தளர்த்தப்படலாம்.

9. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.

புதிய தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும், வளர்ச்சிக்கு கொண்டு செல்லவும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம். புதிய தொழில் தொடங்க விரும்பம் உள்ளவர்கள் அரசிடமிருந்து தேவையான உதவிகள், ஒப்புதல்களை வேகமாக பெறுதல், வரிச்சலுகையை ்3 ஆண்டில இருந்து 5 ஆண்டாக அதிகரிப்பது உள்ளிட்ட பல விசயங்கள் இருக்கும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)