ஐஐடி-யில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு!!!
ஐஐடி-களில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதால் அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என குழு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு, ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டது. அந்த தேர்ச்சி விகிதத்தை, கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2% குறைந்துள்ளது. மாணவிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது குறித்து ஆய்வு செய்த திமோத்தி கோன்சாலஸ் துணைக் குழுவின் பரிந்துரைகள், கூட்டுச் சேர்க்கை குழுவால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இந்தப் பரிந்துரை 2017ஆம் ஆண்டு அல்லது 2018ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தலாமா என இந்த குழு பரிசீலிக்கும். இந்த இட ஒதுக்கீடு காரணமாக மாணவர்களுக்கான இடங்கள் குறையாது என்றும் 2020ஆம் ஆண்டு, ஐஐடி 1 லட்சம் இடங்களுக்கான இலக்கை அடைய உதவும் எனவும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.