30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்.

30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்.

     பண மதிப்பு நீக்கம் காரணமாக ரொக்கமற்ற பரிவர்த்தனைகள் உயர்ந்து வருகின்றன. இதனை மேலும் உயர்த்தும் விதமாக பணப் பரிவர்த்தனைக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 50,000 ரூபாயை ரொக்கமாக பரிவர்த்தனை செய்யும் போது வங்கிகளில் பான் எண் குறிப்பிடுவது அவசியமாகும். இனி 30,000 ரூபாய் பயன்படுத்தினாலே பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம் என திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் அதிக பண பரிவர்த்தனைகள் குறையும் என்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கடைகளில் தற் போது 2 லட்ச ரூபாய் பரிவர்த்தனை களுக்கு பான் எண் அவசியமாகும். அதனை குறைக்கவும் முடிவெடுக் கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிக பணப் பரிவர்த்தனைகள் செய்பவர் களிடம் பான் எண் இல்லை என்னும் பட்சத்தில் ஆதார் எண் குறிப்பிடவேண்டியது கட்டாயமாகும் என்றும் விதிகள் மாற்றப்படலாம். தவிர குறிப்பிட்ட தொகைக்கு பணப்பரிவர்த்தனை செய்யும்பட் சத்தில், பணம் கையாளுவதற்கான கட்டணம் விதிக்கவும் திட்டமிடப் பட்டிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் இந்த கட்டணம் விதிக்கப்படலாம் என தெரிகிறது. ரூ.10 லட்சம் டெபாசிட்: வரித்துறை புதிய விதி ஒர் ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் வங்கி கணக்குகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரத்தை வங்கிகள் வருமான வரித்துறைக்கு ஒப்படைக்க வேண்டும் என வருமான வரித்துறை கோரியிருக்கிறது. முன்னதாக கடந்த நவம்பர் 9 முதல் டிசம்பர் 30 வரையில் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கேட்டிருந்தது.

இப்போது ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்தியவர்கள் மற்றும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் ஓர் ஆண்டில் டெபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வங்கிகள் வருமான வரித்துறையிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஓர் ஆண்டில் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்பவர்களின் தகவலையும் வருமான வரித்துறை கேட்டிருக்கிறது. 30 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்துகள் வாங்குதல் மற்றும் விற்றல் கணக்குகளையும் வருமான வருமான வரித்துறை கேட்டிருக்கிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank