ரிலையன்ஸ் ஜியோ அறிமுக சலுகைகள் டிசம்பர் 31டன் நிறைவு பெற்றது

ஜியோ அறிமுக சலுகையில் வழங்கப்படும் இலவச சேவைகள் டிசம்பர் 31 டன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து என்ன நடக்கும் என தெரியுமா?



ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளை இந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தார். அறிமுக சலுகையாக அனைத்து ஜியோ பயனர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு இலவச 4ஜி டேட்டா, வாய்ஸ் கால், மெசேஜிங், மற்றும் ஜியோ ஆப்ஸ் பயன்பாடு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. 
ரிலையன்ஸ் ஜியோ அறிமுக சலுகைகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதாவது டிசம்பர் 31, 2016 சரியாக 11.59.59 வரை மட்டுமே செல்லுபடியானது. இதன் பின் என்ன கவலை மார்ச் 31, 2017 வரை எல்லா ஜியோ சேவைகளும் வழங்கப்படுமே என்கிறீர்களா.? 
இன்று முதல் வழங்கப்பட இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவைகளில் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளது. அவ்வாறு இன்று முதல் ரிலையன்ஸ் ஜியோவில் மாற இருப்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம்..
ரிலையன்ஸ் ஜியோ அறிமுக சலுகையை பயன்படுத்துவோர் புததாண்டு சலுகைக்கு மாற்றப்படுவர். இது ஜனவரி 1 ஆம் தேதி முதல் துவங்குகிறது. அனைத்து ரிலையன்ஸ் ஜியோ பயனர்களும் 4ஜி டேட்டா மற்றும் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை தொடர்ந்து இலவசமாக, மார்ச் 31, 2017 வரை பயன்படுத்த முடியும். 
அறிமுக சலுகையில் தினமும் 4GB அளவு டேட்டா பயன்படுத்தி வந்த பயனர்களுக்கு இன்று முதல் 1GB அளவு 4ஜி டேட்டா வழங்கப்படும். இதன் படி ஜியோ வாடிக்கையாளர்கள் தினமும் 1GB அளவு டேட்டாவை நொடிக்கு 128KB என்ற வேகத்தில் பயன்படுத்தலாம். 
தினசரி அளவு கடந்து கூடுதலாக அதிகப்படியான டேட்டா பயன்படுத்த வாடிக்கைாயளர்கள் பணம் செலுத்த வேண்டும். இதன் மூலம் அதிகப்படியான டேட்டாவினை அதிவேகத்தில் பயன்படுத்தலாம். STV54 பேக் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது 1GB 4ஜி டேட்டா ஒரு நாள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. STV 301 ரீசார்ஜ் செய்யும் போது 6GB அளவு 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 
அனைத்து ஜியோ செயலிகளும் டிசம்பர் 31, 2017 வரை இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதனால் ஜியோ செயலிகள் மூலம் திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பயனர்கள் தொடர்ந்து இலவசமாக பயன்படுத்த முடியும்.
ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளருக்கு கூடுதல் டேட்டா, புதிய சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ இலவச திட்டங்கள் மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுஎறைகளை மீறுவதாக மற்ற நிறுவனங்கள் குற்றச்சாட்டு எழுப்புள்ளன. இருந்தும் ஜியோ சேவைகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)