இணையத்தில் ஆவணமாகும் 'பொக்கிஷம்' : தயார் நிலையில் 50 ஆயிரம் இ-புத்தகம்!


          தமிழக கலாசாரம், பண்பாடு சார்ந்த பழைமையான ஓலைச் சுவடிகள், கல்வெட்டுக்கள், சரித்திர நாவல்கள், நாணயங்கள் உட்பட அரிய வகை ஆவணங்களை மின்னுருவாக்கம் செய்து
, தமிழ் இணையக் கல்வி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. இம்மாதம் இறுதியில் இணையக் கல்வி இயக்கக இணையதளத்தில், 50 ஆயிரம் இ-புத்தகங்கள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழ் இணையக் கல்வி இயக்கத்தின் இயக்குனராக உதயசந்திரன் பொறுப்பு வகித்தபோது 'டிஜிட்டலைஸ்டு' எனும் மின்னுருவாக்க பணிகள் துவக்கப்பட்டன.


அதன் தொடர்ச்சியாக தற்போது வரை ஓலைச்சுவடிகள், பழைய புத்தகங்கள், இதழ்கள், நாணயங்கள், தொல்லியல் ஆவணங்கள் என ௫௦ ஆயிரம் நுால்கள், 15 ஆயிரம் கல்வெட்டுக்கள், 25 ஆயிரம் பருவ இதழ்கள், 25 ஆயிரம் ஆவணங்களை மின்னுருவாக்கம் செய்யும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.தொழில்நுட்பம் சார்ந்த சில பணிகள் முடிந்தவுடன், புத்தகங்கள் முழுவதும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.872 கல்லுாரி புத்தகங்கள்: மேலும், தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில் 1960 முதல் 1980 வரை கல்லுாரி மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட சட்டம், அறிவியல் உட்பட 35 பாடப் பிரிவுகளில் 872 புத்தகங்களும் 'ஸ்கேன்' செய்யப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இணையக் கல்விக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கலாசாரம், பண்பாடு, வரலாற்று சுவடுகளை எதிர்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சென்னை கன்னிமாரா, தஞ்சை சரஸ்வதி போன்ற மிக பழைமையான நுாலகங்களில் உள்ள அரிய வகை புத்தகங்களும் 'ஸ்கேன்' செய்யப்படுகின்றன.தொல்லியல், அகழ்வாராய்ச்சி பொருட்கள், பழங்கால நாணயங்களும் சேகரிக்கப்படுகின்றன. இணையத்தில் வெளியிடும் பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ளன. குறைந்தபட்சம் 50 ஆயிரம் புத்தகங்களை, இணையக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு கூறினார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)