சத்துணவு மையங்களில் 672 காலிப் பணியிடம்: பிப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்


தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்

காலிப்பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள நேரடி நியமனத்துக்கு பிப். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 362 பள்ளி சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களும், 672 சமையல் உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இவற்றுக்கு நேரடி நியமனம் மூலம் நியமிக்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும், தஞ்சாவூர் மாநகராட்சி, கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களாக உள்ள அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் பிப். 15-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையர் அல்லது மாநகராட்சி ஆணையர் அல்லது நகராட்சி ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்து ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக, (சத்துணவு பிரிவு) விளம்பர பலகைகளிலும் காலிப்பணியிட விபரம் மற்றும் இனச் சுழற்சி விவரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு  நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)