750 PP - COURT NEWS


அன்பார்ந்த தனி ஊதிய பாதிப்பு கொண்ட ஆசிரியர் பெருமக்களே !!
           தமிழகம் முழுவதும் 1.1.2011 முதல் சாதாரண இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனிஊதியம் ரூபாய்
750 பதவி உயர்வில் அடிப்படை ஊதியத்துடன் இணைத்து உயர் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருவதால்
ஏற்படும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய தொடர்ந்து நீதிமன்றத்தில் தனி ஊதியத்தை 1.1.2006 முதல் வழங்கப் போராடும் நிலையில் . தமிழகத்தில் பல இடங்களில்தொடக்கக்க் கல்வித்துறையில் பதவி உயர்வில் 750த னி ஊதியத்தை அடிப்படை ஊதியத்தில் 3% ஊதிய உயர்வு மட்டும் வழங்கி பிறகு கழித்துவிடாமல் அடிப்படை ஊதியத்தோடு இணைத்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்று தணிக்கை தடைகள் வரும் நிலையில் ....நாமக்கல் மாவட்டம் .கொல்லிமலை ஒன்றியத்தில் தனி ஊதியம் பதவி உயர்வில் சேர்த்து ஊதியம் நிர்ணயம் செய்தது தவறு என்றும் 3% கணக்கீட்டில் மட்டுமே தனி ஊதியம் சேர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மிகை ஊதியம் பெற்று வந்த ஆசிரியர் ஒருவரின் ஊதியத்தை இன்று 24.01.2017 உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பிடித்து ஆணை பிறப்பித்து உள்ளார் ....நமது வழக்கு பட்டியலில் வந்தும் விசாரணைக்கு வரவில்லை ..விரைவில் விசாரணைக்கு வரும் .....தனி ஊதிய முரண்பாடுகள் ஓர் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது ......
தகவல்:-திரு.சுரேஷ், ஆசிரியர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)