99 ரூபாயில் விமான டிக்கெட்! : ஏர் ஏசியா !!


ஏர் ஏசியா விமான நிறுவனம் ரூ.99 என்ற குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.


சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் குறைந்த கட்டணத்தில்சேவை வழங்கும் விமான நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெங்களூரு,கவுஹாத்தி, ஹைதராபாத், இம்பால் ஆகிய நகரங்களுக்கு ஒரு வழிப் பயணமாக ஏர் ஏசியா 
விமானத்தில் பயணம் செய்யஅடிப்படை கட்டணமாக 99 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இந்த சிறப்புச் சலுகை திட்டத்தில் பயணம் செய்ய விரும்புவோர்வருகிற 22ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

அவ்வாறு முன்பதிவு செய்பவர்கள் வருகிற மே மாதம் 1ஆம் தேதியில் இருந்து அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 6ஆம்தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இச்சலுகையில் பயணிக்க இயலும். ஏர் ஏசியா விமான டிக்கெட் முன்பதிவெ செய்வதற்குairasia.com இணையதளம், mobile.airasia.com அல்லது ஏர் ஏசியாவின் ஆன்டிராய்டுசெயலி மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)