செல்போனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் குறைத்து, நம்மைப் பாதுகாக்கும் வழிகள்...


செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.
ஏனெனில்,
செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் நம்மை பாதிக்கவே செய்யும்.
மேலும், செல்போன் கதிர்வீச்சினால், நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான (Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
⏰ ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம்.
ஆகவே, 1. நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
 2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால், போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கலாம்.
 3. குழந்தைகளிடம் செல்பானில்
பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
 4. உங்கள் செல்போனில்
சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் (Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம் இருக்கும்.
 5. தூங்கும்போது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
 6. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் உங்கள் தொடர்பை  attend செய்தவுடன் போனை காதருகே கொண்டுவந்து பேசவும்.
ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம்.
 ஏனென்றால், பேசும்போது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் போது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
7. செல்போனில் பேசும்போது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும்.
வலது பக்கத்தில்தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
 8. செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
 9.  செல்போனில் பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிவைத்து பேச வேண்டாம்.
 உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022