ரூபாய் நோட்டு தொடர்பான அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் அவகாசம்!!
புதுடெல்லிமத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவது,
டெபாசிட் செய்வதற்கான கெடு நேற்றுடன் முடிந்தது.
இனி மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கிகளில் மட்டும் பிரமாண பத்திரத்துடன் மாற்றிக்கொள்ள முடியும். மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தாலோ, கடத்தினாலோ, வாங்கினாலோ குற்றம் என்றும், அதற்கு ரூ.10 ஆயிரம் அல்லது அந்த பணத்தின் 10 மடங்கு, இதில் அதிகமானதை அபராதம் செலுத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த அவசர சட்டத்துக்கு நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.இந்த அவசர சட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 30–ந் தேதி வரை அவர்கள் ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. கெடுவுக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது திரும்ப பெறப்பட்டது